Saturday, October 07, 2006

கிராமத்து அரட்டை அரசியல் - 1

நண்பர் அனானி மெயிலில் அனுப்பிய அரசியல் அரட்டைக் கச்சேரி, பதிவாக ! கச்சேரியைத் தொடருவாராம், பார்ப்போம் ! என்சாய், நண்பர்களே :-)))

******************

""என்னண்ணே...என்ன விசேசம்""" என்றபடி வந்தான் மலையாண்டி

மூக்கையா ரொம்ப சீரியஸாக " டி.வி பெட்டி மேல விளுந்து ஒரு பச்ச புள்ள செத்துப் போயிடுச்சாம்பா " என்றார்

"எந்த டி.வி பெட்டிண்ணே..இப்ப இலவசமா கொடுத்தாங்களே அதுவா"

"அடப்பாவி..எதுக்கும் எதுக்கும் முடிச்சு போடுற..ஏண்டா உங்க உலக அறிவை வளக்க டி.வி பெட்டி குடுத்தா அதுல கூடவாட பாலிடிக்ஸ் பண்ணுவீங்க... பாவிப்பய புள்ளைகளா "

"நீங்க மட்டும் ஊருல சிக்குன் குனியா நோய் பரவிக்கிடக்கு..அவனவன் மூட்டுக்கு மூட்டு வலிக்குதுன்னு மொடங்கிப் போய் கெடக்கான்... கேப்பார்..தடுப்பார் யாருமில்லையா அப்படீன்னதுக்கு....கொசு கடிச்சது என்னமோ இப்பதான்..ஆனா சிக்குன் குனியா கொசு முட்டை உருனானது இதுக்கு முந்துன ஆட்சில அப்படீனூ சொன்னீங்களே"

"உண்மைதானேடா அது...போன ஆட்சில போட்ட முட்டைதானடா இப்ப கொசுவா மாறி கடிச்சு சிக்குன் குனியா பரவி பாடா படுத்துது. "

"எல்லாம் போன ஆட்சியிலதான் அப்படீன்னா நீங்க வரிப்பணத்தையும் அரசாங்க நிலத்தையும் வாரிக்குடுத்தது தவிர வேற என்ன பண்ணி கிழிச்சீங்க இதுவரைக்கும்"

" டேய்...நடக்குமான்னு இருந்த சூரியா-ஜோதிகா கல்யாணமே எங்க ஆட்சிலதாண்டா நடந்தது..ஒங்க அஞ்சு வருச ஆட்சீல காதலர்களை ஒண்ணா சேக்க முடிஞ்சுதாடா ..பேச வந்துட்டான்..அடுத்து பார்ரா செல்வராகவன் - சோனியா அகர்வால் கல்யாணத்தையும் முடிச்சு வச்சு ரெட்டை விழா எடுத்துக் காட்டுரோம்"

அப்பொழுது வெற்றிலை பாக்கு மென்று கொண்டே வந்தவரைப் பாத்து மூக்கையா

" வா..மணி...உங்க கட்சி சார்பா "தமிழன் " அப்படீன்னு டிவி சானல் தடபுடலா ஆரம்பிச்சுட்டாங்க போல இருக்கே"

"ஆமண்னே...பின்ன எங்க கட்சியும் தேசிய அளவுல வளந்துருச்சுல்ல..பின்ன ஒளிஊடகம் இல்லையின்னா எப்படி"

"சொன்னாங்கப்பா..உங்க மத்திய அமைச்சர் கூட நிகழ்ச்சிக்கு வெள்ளை சொள்ளையா வேட்டியெல்லாம் கட்டிக்கிட்டு வந்தாராமே..அதுவும் பழக்கமில்லாததால சங்கடமா இழுத்து இழுத்து விட்டுக்கிட்டு உக்காந்திருந்தாராமே...இவன் கிண்டலடிச்சுக்கிட்டுருந்தான் ..எதுக்கப்பா ...எப்பவும் போல எங்க பேரப்புள்ளை மாதிரி சூட்டும் கோட்டுமா வர வேண்டியதுதானே"

"இல்ல...முக்கய்யண்ணே..தமிழ் நிகழ்ச்சிக்கு பொருத்தமான தமிழர் உடையில வர்ரதுதான சபை மரியாதை அதுதான்"

"ஆமா..உழவர் சந்தை திறப்பு விழான்னு கூப்பிட்டா என்ன உடுப்புல வருவாராம் ??? " என்று மலையாண்டி முனகினான்.

"என்னாடா முனகுற " என்றனர் மூக்கையாவும் மணியும்.

" ஒண்ணுமில்லை... மத்தவங்க மாதிரி டெல்லிக்கும் வேட்டி கட்டிகிட்டு போக வேண்டியதுதான..அங்க மட்டும் தமிழர் பண்பாட்டைக் காப்பாத்த வேண்டாமா ?"

"டேய் ...அந்த ஊர்க்காரன் வேட்டியப் பாத்து படிக்காதவன்னு தப்பு கணக்கு போட்டுருவான்ல...இவரு டாக்டருல்ல..அதான் " என்றார் மூக்கையா

" அதெல்லாம் ஒண்ணுமில்லை...வேட்டி அவுந்துருச்சின்னா அவமானமாயிருமில்லை..அதுதான்..தமிழ்நாட்டுலன்னா அவுந்தா கூட அவமானமில்லை...தானா அவுரலை ... நாங்கதான் எதிர்ப்பு போராட்டம் நடத்தினோம் அப்படீன்னு சொல்லி சமாளிச்சுரலாம் "

"டேய்...அவுத்து காட்டுனது ஒங்க கட்சி ஆளுங்க..தோத்த கடுப்புல என்ன வேணா பேசுவியா" என்று மணி அடிக்கப் போக மூக்கையா "அட விடுங்கப்பா" என சமாதானப்படுத்தப் புக....மலையாண்டி ஏதோ சொல்ல அந்த இடமே உண்மையான தமிழக சட்டமன்றம் போல மாறியதால் கிராமத்து அரசியல் மேடை தற்காலிகமாக கலைந்தது.

கிராமத்து அரசியல் அரட்டை தொடரும் :)

*** 240 ***

7 மறுமொழிகள்:

said...

good post, buddy :)

இலவசக்கொத்தனார் said...

ஹாஹாஹா! நல்லா எழுதியிருக்கீங்க.

enRenRum-anbudan.BALA said...

இலவச கொத்தனாரே,
நன்றி, ரொம்ப சிரிக்காதீங்க :)

enRenRum-anbudan.BALA said...

CT,
என்ன, பார்த்து ரொம்ப நாளாச்சு ? அடுத்த பதிவு நாளை !!!

said...

நல்லா இருக்கு...பதிவெல்லாம் சீக்கிரம் போட்டுடுங்க...timing ரொம்ப முக்கியம் :))

பதிவனுப்பிய அனானி

ச.சங்கர் said...

ஏன் சார்

பாலான்னு பேர் இருந்தா ஒரே மாதிரி யோசிப்பீங்களா ?
பாபாவும் சிக்குன் குனியா பத்தி பதிவு போட்டுட்டார்

http://therthal2006.blogspot.com/2006/10/aiadmk-is-root-cause-for-chikun-kunya.html

""" டேய்...நடக்குமான்னு இருந்த சூரியா-ஜோதிகா கல்யாணமே எங்க ஆட்சிலதாண்டா நடந்தது""""

:))))

enRenRum-anbudan.BALA said...

கி.அ.அ.அனானி,
நீங்க அனுப்பிச்ச 2 மேட்டரையும் பதிவாக்கிட்டேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

சங்கரா,
அதாம்பா "பாலா" மேஜிக் :)

நன்மனம்,
நன்றி, ரொம்ப சிரிக்காதீங்க :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails